வாழலாம் வா வா!

நீயும் நானும் இந்த வையத்தினை விட்டு
தூரம் செல்வோம் அந்த வானம் வெல்வோம்!
சாவும் வந்து நம்மைக் காணாது நிற்க
வெற்றி என்போம் அது வாழ்க்கை கொள்வோம்!

தூரம் என்ன தூரம் பெண்ணே நீ
எந்தன் கண்ணில் நிற்கும் முன்னே
காலம் என்ன காலம் பெண்ணே என்
கால்கள் வேகம் கண்டிடு கண்ணே!

கண்ணில் உள்ள கனவுகள் எல்லாம்
காட்சிகளாக்கிக் காண்போம் வா வா
அறமே கொண்டு பொருள் தள்ளி வாழ்வோம்
வருவது வரட்டும் வாழ்வா சாவா!

பாதை பற்றி பயமில்லை பெண்ணே
பாராளும் ஈசன் துணையுண்டு கண்ணே
போர் ஒன்று மூண்டாலும் போவதேன்றானபின்
போவதற்கிடமொன்று கொள்ளலாம் பின்னே!

ஆதிக்கடவுளாம் ஆனைமுகத்தான் அருள
அறுபடை அகம் கொண்ட ஐயனும் அகம்கொள்ள
அன்பும் அறிவும் அனைத்தும் நினைவிருக்க
அடியேன்  துணைவி ஆகவும் மனம்வருமோ!

- வ.ர.ராகவன்.

Comments

Varun Nivas said…
Maass. Arumai! :D

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Belur & Halebidu - II

Belur & Halebidu - I