The Sun's Hangover

Share

The Sun had gone for a booze last night and is now experiencing a hangover, yeah, for the first time...!

First thing in the morning, on rising up, He starts searching for The Moon, which he knew was present there last night....! :P

Read on... :)

கதிரவன் கனவுலகம்


சந்திரன் சாய்ந்ததும் எழுபவன் திகைப்பதுவாம்:
நேற்றிரவு இங்கிருந்த இவனங்கு ஏன்சென்றான்...?
இவன்தேடி அவ்வுலகோர் விண்ணுலகம் உலவுகையில்
பொறுப்பிலாச் சிறுவன்போல் சொல்லின்றி ஒடினனோ...?

தன்மேனி கொண்டபுண்கள் தனை ஆற்றிடவே
மானுடர் புரம்தேடி மூடனிவன் சென்றனனோ...?
சிறுதூரம் சென்றாலே சமுத்திரம் சீரிடுமே
மண்ணுலகத்தா ரெல்லாம் மாண்டுவிடும் நிலைவருமே...!

ஏட்டில் மட்டுமே பேர்பாடும் புலவர்கள்
கண்டுதான் நன்றியைக் கூறிடத் தோன்றினனோ...?
கணினியின் கண்கொண்ட கல்லுளம் கொண்டார்க்குக்
கனியிவன் தோற்றம்தான் கண்ணிலே நிலைத்திடுமோ...?

தடாகத் தண்ணீரில் தன்முகம் கண்டதும்
தாளமே இல்லாது தாண்டவம் ஆடுவனே...!
தங்கத்தின் பின்செல்லும் மாந்தரின் மனதிற்குள்
தோழன் இவனங்கு தங்கிடவே கூடிடுமோ...?

நான்காணும் இதென்ன மாயமா? இல்லது
விடியலின் முன்வந்த என்னியற்கைப் பிழையா...?
பந்தாய்த் தோன்றிய சிறுபிள்ளை இப்போது
நளிந்த நடைகொண்ட நாரியாய் மாறினனேன்...?

அழகிற் குதாரணம் எனக்கூறி இவன்காண்பர்
இவனே உருமாற திகைப்பதெவ் விதமாகும்...?
ஆயினும் பெண்பிள்ளை வேடம் புகுந்தவன்
இவளின்றி இனிவேறு அழகென்ப தெதுவாகும்...?

பஞ்சமே பாராப் புன்னகை கொண்டவளாய்ப்
பெண்ணிவள் மேனியில் புண்ணொன்றும் நானறியேன்...!
பார்ப்பவர் பார்வையில் ஆயிரம் ஆசைகளைத்
தூவும் திறமையின் சூட்சமமும் நானறியேன்...!

என்சீடன் வானரனின் தவமிங்கு கலைந்திடுமோ...?
இவளுடல் அழகுருவில் அவன்மனமும் கலங்கிடுமோ...?
மின்னலின் உருவமது கண்களில் பாயவே
பூவுலகத் தோருயிர் என்னெண்ணம் கொண்டிடுமோ...?

சந்திரா ! வந்திரா தில்லாமல் போகாது
மண்ணினம் உனைக்காண நிலையொன்று கொள்ளாது...!
போதுமுன் விளையாட லின்றோடு நிற்கட்டும்
மாந்தர்தன் துன்பங்கள் இதோடு போகட்டும்...!

PS: C & C welcome...! :)

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Belur & Halebidu - II

Kuru kuru kangalile...